Connect with us

எம்.ஜி.ஆரை சுருக்குன்னு குத்துற மாதிரி பேசிட்டேன்!.. முதலமைச்சராய் இருந்தும் வாலியிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!..

vali mgr

Cinema History

எம்.ஜி.ஆரை சுருக்குன்னு குத்துற மாதிரி பேசிட்டேன்!.. முதலமைச்சராய் இருந்தும் வாலியிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!..

Social Media Bar

MGR and Vaali: தமிழ் திரை உலகிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகர் எம்.ஜி.ஆர்தான். அவருக்கு பிறகு அந்த அளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் வரவேற்பை பெற்ற இன்னொரு தலைவர் வரவில்லை என்றே கூற வேண்டும்.

இப்போதும் கூட எம்.ஜி.ஆர் பற்றி பொதுவெளியில் யாரும் விமர்சனம் செய்து விட முடியாது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சுற்றியுள்ள நண்பர்களிடமும் பழகுபவர்களிடமும் மிகவும் இயல்பாக பழகுபவர்.

Vaali-2
Vaali-2

முதலமைச்சராக ஆன பிறகும் கூட எம்.ஜி.ஆர் தனது சினிமா வட்டார நண்பர்களிடம் தொடர்ந்து தொடர்பில்தான் இருந்தார். அப்போதெல்லாம் சினிமா தொடர்பான விழாக்கள் எடுக்கப்படும் பொழுது அதில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சிறப்பு விருந்தினராக அழைத்து விடுவார்கள்.

இதனாலேயே அப்போது நடக்கும் திரைப்படங்களின் வெற்றி விழாவில் அதிகபட்சம் எம்.ஜி.ஆரை பார்க்க முடியும். தொடர்ந்து எம்.ஜி.ஆர் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருந்த பொழுது ஒருமுறை பெரிய புயல் தாக்கி தமிழ்நாட்டில் பெரிய சேதம் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆரிடம் வாலி கேட்ட கேள்வி:

அப்பொழுது எம்.ஜி.ஆர் நடிகர்களிடம் பேசி நிதி உதவிக்காக நாடகங்களை நடத்த சொல்லி இருந்தார். இதற்காக தமிழ்நாட்டில் முக்கியமான நான்கு மாவட்டங்களில் நிதி உதவிக்காக அசோகனின் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் அசோகனாக நடிகர் சிவாஜி கணேசன் நடித்தார்.

அப்பொழுது எம்ஜிஆரின் அருகில் அமர்ந்திருந்த வாலி சிவாஜியின் நடிப்பை கண்டு இந்திய சினிமாவிலேயே சிவாஜிக்கு நிகரான ஒரு நடிகர் கிடையாது இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டு விட்டார்.

mgr
mgr

எம்.ஜி.ஆரும் ஒரு நடிகராக இருக்கும் பொழுது அவரிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கக் கூடாது என்று பிறகு யோசித்து இருக்கிறார் வாலி. ஆனால் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத எம்.ஜி.ஆர் ஆமாம் சந்தேகமில்லாமல் இந்தியாவில் சிவாஜி கணேசனை போன்ற ஒரு நடிகர் கிடையாது என்று பெருமிதமாக கூறியிருக்கிறார்.

இதேபோல ஒரு முறை வெளிநாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாட்டுக்கு வந்த பொழுது அவர்களுக்கு தான் நடித்த திரைப்படத்தை போட்டு காட்டாமல் சிவாஜி கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை போட்டு காட்டினார் எம்.ஜி.ஆர். இப்படி தொடர்ந்து சிவாஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.

To Top