Connect with us

இவனுக்கு பாட்டே எழுத கூடாதுன்னு நினைச்சேன்..- வாலியை பாடாய் படுத்திய பாக்யராஜ்!

Cinema History

இவனுக்கு பாட்டே எழுத கூடாதுன்னு நினைச்சேன்..- வாலியை பாடாய் படுத்திய பாக்யராஜ்!

Social Media Bar

தமிழில் பன்முக திறன் கொண்ட இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். அவரது காலகட்டத்தில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் பாக்கியராஜ். பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்களில் முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஒரு நடிகராக இயக்குனராக பாக்கியராஜை பலருக்கும் தெரியும்.

ஆனால் பாக்கியராஜுக்கு இசையமைக்கவும் தெரியும் 30க்கும் அதிகமான பாடல்களை பாக்யராஜ் இசை அமைத்துள்ளார் 1980 முதல் 90 கால கட்டங்களில் பல படங்களில் பாக்யராஜ் இசையமைத்துள்ளார். ஆனால் பலருக்கும் இந்த விஷயம் தெரியாது.

ஞானப்பழம், அவசர போலீஸ் 100, இது நம்ம ஆளு, எங்க சின்ன ராசா போன்ற திரைப்படங்களுக்கு பாக்கியராஜ் தான் இசையமைத்தார். பெரும்பாலும் பாக்யராஜ் இசையமைக்கும் படங்களுக்கு பாடல் ஆசிரியர் வாலி தான் பாடல்கள் எழுதுவார்.

இது குறித்து வாலி கூறும் போது பாக்கியராஜ் இசை மீது ஆர்வம் கொண்டு தூங்காமல் கூட இசையை கற்றவர் என வாலி கூறியுள்ளார். ஆனால் பாடலுக்கான வரிகளை எழுதும் பொழுது மிகவும் படுத்தி எடுத்து விடுவார் பாக்கியராஜ் என வாலி கூறுகிறார்.

ஒவ்வொரு முறை பாடலுக்கு வரிகள் எழுதிய பிறகும் இனி பாக்யராஜின் படங்களுக்கு வரிகளை எழுதக்கூடாது என்கிற மனநிலை உருவாகும் ஆனால் பிறகு அந்த மனநிலை மாறிவிடும் என பாக்கியராஜ் குறித்து வாலி கூறி உள்ளார்.

To Top