Cinema History
போர் தொழில் படத்துல அந்த சீன் வேட்டையாடு விளையாடுல இருந்து காபி அடிச்சது!..
சில திரைப்படங்கள் சினிமாவில் வெளியாகி சில நாட்கள் கழித்தே பிரபலமாகும். அப்படி தமிழ் சினிமாவில் சில நாட்களுக்கு முன்பு பிரபலமான திரைப்படம்தான் போர் தொழில். போர் தொழில் திரைப்படமானது வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இந்த திரைப்படத்திற்கு அதிக விளம்பரம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் படம் வெளியாகி சிறிது நாட்களிலேயே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பலரும் இந்த படத்தை பார்க்க துவங்கினர்.
இந்த படம் குறித்து விக்னேஷ் ராஜா கூறும்போது தனக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்த படம் வேட்டையாடு விளையாடு என கூறியிருந்தார். அதே போல வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போலவே போர் தொழில் திரைப்படத்திலும் காட்சிகள் வைத்திருந்தார்.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு காட்சியில் வில்லன் கமல்ஹாசனை சுடுவதற்கு முயற்சிப்பார். அப்போது அந்த துப்பாக்கி வேலை செய்யாது. உடனே கமல்ஹாசன் துப்பாக்கியை கொடு நான் சுடுவதற்கு சொல்லி தரேன் என கூறுவார்.
அதே போல போர் தொழில் திரைப்படத்திலும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் வில்லனுக்கு துப்பாக்கியை வைத்து சுட தெரியாது. அதை ஹீரோ மீது தூக்கி எறிவான். அதை கைப்பற்றிய ஹீரோ அதை சரி செய்து சுடுவான். அந்த காட்சி வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இன்ஸ்பேர் ஆனது என இயக்குனர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
