நடிகர் பிரபாஸ் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் கல்கி 2898 ஏ.டி இந்த திரைப்படம் ஹாலிவுட் பாணியில் மாபெரும் பொருட் செலவில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது. இந்து புராண கதைப்படி கலியுகத்தின் இறுதியில் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் உருவாகும். சாகா வரத்தை சாபமாக கொண்டுள்ள அசுவத்தாமனுக்கு அது சாப விமோச்சனம் கொடுப்பதோடு கலியுகத்தில் பெருகிய தீமைகளை அது அழிக்கும் என கூறப்படுகிறது.

அதை கதை களமாக கொண்டதுதான் இந்த கல்கி திரைப்படம். தீபிகா படுகோன் வயிற்றில் வளர்ந்து வரும் கல்கி அவதாரத்தை பாதுகாக்கிறார் அசுவத்தாமனான அமிதாப் பச்சன்.
கதாநாயகனில் மாற்றம்:
இந்த நிலையில் தீபிகா படுகோனை பணத்திற்காக பிடிக்க வருபவராக பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ்தான் ஹீரோ என்றாலும் இரண்டாம் பாகத்தில் அவர் ஹீரோ இல்லை என கூறப்படுகிறது.

கல்கி அவதாரமாக பிறக்கும் அந்த குழந்தைதான் இரண்டாம் பாகத்தின் கதாநாயகனாக இருக்கும் என கூறப்படுகிறது, அந்த விஷ்ணுவின் அவதாரத்தில் யார் நடிப்பார் என்பது சர்ப்ரைஸாக இருந்து வருகிறது.
ஆனால் தமிழ் பிரபலம் ஒருவர்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் ஒருபக்கம் பேச்சு உள்ளது. ஆனால் இன்னமும் இந்த இரண்டாம் படத்திற்கான கதாநாயகன் தேர்ந்தெடுக்கப்படவில்லை.






