Latest News
இரு நண்பர்களால் ராஜ்ஜியமே அழிந்த கதை!.. அனலை கிளப்பிய சலார் ரிலீஸ் ட்ரெய்லர்!.. இதுதான் கதையா?..
Salaar Trailer: கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் இயக்கிய கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் இயக்கி வெளியாகவிருக்கும் திரைப்படம் சலார்.
இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பே எழுதிவிட்டார் என கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அவருக்கு இதை படமாக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரைலரில் இதன் கதை ஓரளவு தெரிந்துள்ளது.
கதைப்படி கான்சார் என்னும் பகுதியில் ஒரு மதிப்புமிக்க பொறுப்பில் பிரித்திவி ராஜ் இருக்கிறார். அவருக்கு கான்சாரில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வரும்போது தனது நம்பிக்கைக்குரிய நண்பனான பிரபாஸை அழைக்கிறார். பிரபாஸின் பெயர்தான் சலார் என கூறப்படுகிறது. பிரபாஸ் ஒரு மெக்கானிக்காக இருக்கிறார்.
அதே சமயம் துப்பாக்கிகளை கொண்டு புது புது கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவராக இருக்கிறார். இதனால் ஒரு படையே அவரை அழிக்க வந்தாலும் அதனை எதிர்க்கும் வல்லமை பிரபாஸிற்கு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கான்சாரின் பெரும் தலைக்கும், துப்பாக்கி தொழில்நுட்பம் தெரிந்த ஒருவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையே கதையாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதல் பாதி மோசம்!.. சலார் படக்கதை என்ன!.. சுருக்கமான விமர்சனம்…
முதல் பாகத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாகதான் கதை இருக்கும். இந்த படத்தி இறுதியில்தான் இருவரும் எதிரிகளாக மாறுவார்கள் என்பது ரசிகர்களின் தியரியாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இரண்டாம் பாகம் இன்னமும் ரத்த களரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் இந்த ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு நடுவே இந்த படமும் பார்ப்பதற்கு கே.ஜி.எஃப் மாதிரியே இருக்கிறது. கே.ஜி.எஃப் தாக்கமே இல்லாமல் இயக்குனரால் படம் பண்ண முடியாதா!.. ஒரே மாதிரியான திரைக்கதை அமைப்பை எத்தனை தடவைதான் பார்ப்பது என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. வருகிற டிசம்பர் 22 இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்