எனக்கு நிறைய கெட்ட வார்த்தை வரும்!.. பிரதீப் ஆண்டனிதான் அடுத்த அசீம் போல…
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானதாகும். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறு நாளில் இருந்து போட்டியாளர்களுக்கு வரிசையாக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறை பிக் பாஸில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் போன முறையை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பிரபலமான கூல் சுரேஷ், ரவீனா தகா போன்ற முக்கிய பிரபலங்கள் இருப்பது நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்கி உள்ளது,
போன முறை அதிகமான மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஒரு போட்டியாளராக அசிம் இருந்தார். இந்த முறை அசிம் இல்லாத குறையை பிரதீப் ஆண்டனி போக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நேற்று வந்தபோதே பிரதீப் ஆண்டனியின் பர்பாமன்ஸ் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இன்று போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கெட்ட வார்த்தை இங்கு பேசலாமா? ஏனெனில் எனக்கு ப்லோவில் எனக்கு கொஞ்சம் கெட்ட வார்த்தை வந்துவிடும் என்று சகஜமாக கேட்டார்.
எனவே இந்த 100 நாளில் நிகழ்ச்சி முடிவதற்குள் எப்படியும் பல சம்பவங்களை நிகழ்த்தி விடுவார் பிரதீப் ஆண்டனி என்று பிக் பாஸ் ரசிகர் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
