Connect with us

அடுத்த படத்துல சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரு போல!.. சிறப்பான படத்தில் கமிட் ஆன பிரதீப் ரங்கநாதன்!..

pradeep ranganathan

News

அடுத்த படத்துல சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரு போல!.. சிறப்பான படத்தில் கமிட் ஆன பிரதீப் ரங்கநாதன்!..

Social Media Bar

லவ் டுடே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது.

அப்போதைய சமயத்தில் தமிழ் மக்கள் அந்த திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். இதன் மூலம் அவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அதனை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கலாம் என முடிவு செய்தார்.

தற்சமயம் தொடர்ந்து கதாநாயகனாக கமிட்டாகி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் தற்சமயம் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

pradeep-ranganathan
pradeep-ranganathan

அதற்கு பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு பிறகு சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த கீர்த்தி ஈஸ்வரன் என்கிற நபர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு படத்தின் கதையை படமாக்குவதற்கு வந்து கூறும்போது உடனடியாக அதற்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தயாரிப்பாளர்கள் கேட்ட உடனேயே இந்த கதையை ஓ.கே சொல்லிவிட்டார்களாம். அதே போல பிரதீப் ரங்கநாதனுக்கும் கதையை கேட்ட உடனே பிடித்துவிட்டதாம்.

எனவே கண்டிப்பாக இது ஒரு சிறப்பான கதையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு இது முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top