Tamil Cinema News
தனுஷ்க்கு போட்டியா இறங்க இதுதான் காரணம்.. விளக்கம் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.!
தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். மிக குறுகிய காலத்திலேயே பிரதீப் ரங்கநாதன் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக மாறி விட்டார்.
ஆரம்பத்தில் கோமாளி என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
லவ் டுடே திரைப்படம் அப்போதைய சமயத்தில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
தொடர்ந்து எல்.ஐ.கே, டிராகன் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். லவ் டுடே படத்தில் அவர் நடித்தது முதலே அவரது நடிப்பு பார்ப்பதற்கு கிட்டத்தட்ட தனுஷை போலவே இருப்பதாக பலரும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் டிராகன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே 21 ஆம் தேதிதான் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தனுஷுடன் போட்டி போட்டுக்கொண்டுதான் இந்த தேதியில் படத்தை வெளியிடுகிறீர்களா என இதுக்குறித்து பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் இங்கு யாருக்கும் யாருமே போட்டி இல்லை. முதலில் இந்த படத்தை பிப்ரவரி துவக்கத்தில்தான் வெளியிட திட்டமிட்டோம்.
ஆனால் அந்த சமயத்தில் அஜித் சாரின் விடாமுயற்சி வந்துவிட்டது. எனவே நாங்கள் தேதியை தள்ளி வைக்க நினைத்தோம். அதற்கு நல்ல தேதியை தேடியப்போது பிப்ரவரி 21 சரியாக தெரிந்தது. தனுஷ் சாருக்கும் அந்த தேதியே நல்ல தேதியாக தோன்றியிருக்கலாம் என கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
