Tamil Cinema News
கடைசி நேரத்தில் அழுதுட்டேன்.. டிராகன் படம் குறித்து இயக்குனர் ஷங்கர்.. பிரதீப் கொடுத்த பதில்..!
தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முக்கியமான நடிகராவார். அவரது முதல் திரைப்படமான லவ் டுடே திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கான வரவேற்புகளும் அதிகமாக இருந்தன.
இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து மூன்று படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் மற்றும் எல்.ஐ.கே ஆகிய இரண்டு திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று நடிக்க துவங்கினார்.
டிராகன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியான முதல் நாளே இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கதாநாயகனாக மாறியுள்ளார்.
இந்த நிலையில் டிராகன் திரைப்படம் குறித்து பிரபல இயக்குனரான ஷங்கர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பேசிய ஷங்கர். டிராகன் திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும் பிரதீப்பின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் உங்களது படத்தை பார்த்து வளர்ந்தவன் சார் நான் உங்களிடம் கிடைக்கும் பாராட்டால் எனக்கு உண்டான மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
