News
ப்ரியா ஆனந்தில் துவங்கி!.. பெண்களிடம் அத்துமீறிய பிரபல யூ ட்யூபர்!..
தற்போது பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் எல்லா இடங்களிலும் பெண்கள் பலவிதமான பிரச்சனைகளுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
அந்த வகையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் கதாநாயகிகள் முதல் துணை நடிகைகள் வரை அனைவரும் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தங்களால் சாதிக்க முடியாமல் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் youtuber ஒருவர் நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை பல வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களை தன் வலையில் சிக்க வைப்பதற்கு முயற்சிகளை எடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரிடம் இருந்து இளம் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஹாஷ்டேக் ஏற்படுத்தி நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பிரசாந்த் ரங்கசாமி
பிரசாத் ரங்கசாமி திரைப்பட விமர்சகர் ஆவார். மேலும் நடிகருமான இவர் அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் சினிமா நடிகர், நடிகைகள், திரைப்படங்களை பற்றி விமர்சனம் செய்து வரும் ரங்கசாமி தற்போது பெண்கள் விவகாரத்தில் சிக்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்த் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வழக்கம் போல இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு கமெண்டில் பிரசாந்த் ரங்கசாமி முரட்டு சிங்கிள்ஸ் பாவம் என்று அவரை டேக் செய்து குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் கோபம் அடைந்த பிரியா ஆனந்த் அவரை டேக் செய்து பாண்டா என்று அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கிருக்கிறார் பிரசாந்த் ரங்கசாமி.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஹாஷ்டேக்
நடிகை பிரியா ஆனந்திடம் இவ்வாறாக பேசிய பிரசாந்த் ரங்கசாமி தற்போது இளம் பெண் ஒருவரிடம் பேசி இருக்கும் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி அது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இளம் பெண் ஒருவரிடம் பிரசாந்த் ரங்கசாமி அத்துமீறி பேசி இருக்கிறார். ரங்கசாமியின் சாட்டில் ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும் திட்டியும் வருகிறார்கள்.
அந்த இளம் பெண்ணை இவரின் வலையில் சிக்க வைப்பது போன்ற பல கருத்துகளை பேசியிருப்பது தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும் அந்தப் பெண் அவரிடமிருந்து தப்பிப்பதற்காக முயற்சி செய்திருப்பதும் அந்த சாட்டில் தெரிகிறது. ஆனாலும் தொடர்ந்து பேசிய பிரசாந்த் ரங்கசாமி அந்த இளம் பெண்ணை மயக்குது போல பேசியிருக்கிறார்.
தற்போது நெட்டிசன்கள் #SaveGirlsFromPrashanth ஹாஸ்டேக் என்று சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தி பெண்களை பிரசாந்த் தங்க சாமிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என புகைப்படங்களையும், மீம்ஸ்க்களையும் வெளியிட்டு தற்போது தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
