Movie Reviews
கள்ளு கடையில் நடக்கும் கொலை.. துப்பறியும் கதாநாயகன்… Pravinkoodu Shappu பட விமர்சனம்.!
நடிகர் பாசில் ஜோசப் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இப்போது நிலவி வருகிறது. அதற்கு தகுந்தாற் போல இவரும் வித விதமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாகதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்மான் திரைப்படம் கூட ஓ.டி.டி வழியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பாசில் ஜோசப் நடிப்பில் சோனி லிவ் ஓ.டி.டியில் வெளியான திரைப்படம் தான் Pravinkoodu Shappu.
இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார் பாசில் ஜோசப்.படத்தின் கதைப்படி திருச்சூருக்கு பதவி ஏற்று வரும் போலீஸ் அதிகாரியாக பாசில் ஜோசப் இருக்கிறார். அவர் இதற்கு முன்பு 14 குற்றங்களில் குற்றவாளியை கண்டறிந்தவர்.
மற்ற போலீஸ் மாதிரி ஆட்களை பிடித்து அடிக்காமல் துப்பறியும் முறையிலேயே இவர் குற்றவாளியை கண்டறிவார். இந்த நிலையில் வேலைக்கு வந்த முதல் நாளே ஒரு கொலை குற்றத்தை விசாரிக்கும் பணி இவருக்கு வருகிறது.
டோடி ஷாப் எனப்படும் கள்ளு கடையில் அதன் உரிமையாளரான கொம்பன் பாபு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் சிலர் அந்த கடையில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த கொலையை யார் செய்தார் என்பதை கதாநாயகன் கண்டறிவதே கதையாக இருக்கிறது.
விறு விறுப்பை தூண்டும் இந்த கதைக்கு இப்போது வரவேற்புகள் அதிகரித்து வருகிறது.
