Connect with us

சேரி என்றால் அன்பு, அப்ப குஷ்பு என்றால் செருப்பு!.. பதிலடி கொடுத்த பத்திரிக்கையாளர்!..

khusboo

Latest News

சேரி என்றால் அன்பு, அப்ப குஷ்பு என்றால் செருப்பு!.. பதிலடி கொடுத்த பத்திரிக்கையாளர்!..

Actress Kushboo : த்ரிஷாவிற்கு சபோர்ட் செய்கிறேன் என வந்து சமூக வலைத்தளங்களில் கலாய் வாங்கி சென்ற பிரபலங்களில் நடிகை குஷ்பு முக்கியமானவர். நடிகை குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி இருவரும் மன்சூர் அலிக்கான் த்ரிஷா குறித்து பேசியதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் சிரஞ்சீவியே பல பெண்களிடம் எல்லை மீறி நடந்துக்கொண்டுள்ளார் என கூறி அந்த வீடியோக்களை வெளியிட்டு சிரஞ்சீவியை தாக்கி வந்தனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கும் காரணத்தினால் அவர் மன்சூர் அலிக்கான் மீது போலீஸ் வழியாக நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் நேற்று மன்சூர் அலிக்கான் அவராகவே மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டிவிட்டார். ஆனால் குஷ்புவை வைத்து புது பிரச்சனை ஒன்று உருவாகிவிட்டது. குஷ்பு த்ரிஷாவிற்கு ஆதரவாக போட்டிருந்த பதிவிற்கு பதிலளித்த ஒருவர் பேசும்போது மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கற்பழிக்கப்பட்டப்போது இந்த தேசிய மகளிர் ஆணையம் என்ன செய்தது என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த குஷ்பு இந்த மாதிரி சேரி மொழியில் பேசுபவர்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என கூறிவிட்டார். இதன் மூலம் பாமர மக்களை கீழ்தரமாக பேசியுள்ளார் குஷ்பு என அவரை அனைவரும் விமர்சிக்க துவங்கினர். இதற்கு நடுவே இணையத்தில் ட்ரான்ஸ்லேட்டரில் வரும் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்த குஷ்பு ஃப்ரெஞ்சு மொழியில் சேரி என்றால் அன்பு என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது குஷ்பு இப்படி ஒரு கேவலமான விளக்கத்தை கொடுத்திருக்க கூடாது. லத்தின் மொழியில் குஷ்பு என்றால் செருப்பு என அர்த்தம். அதற்காக குஷ்புவை நாம் அப்படி அழைக்க முடியுமா? என்று சரியான பதிலடி கேள்வியை கேட்டுள்ளார் பிஸ்மி.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top