Connect with us

கேரள மக்கள் என்ன பத்தி தப்பா நினைச்சுட்டு இருக்காங்க.. மனம் வருந்திய பிரித்திவிராஜ்.!

prithiviraj

Tamil Cinema News

கேரள மக்கள் என்ன பத்தி தப்பா நினைச்சுட்டு இருக்காங்க.. மனம் வருந்திய பிரித்திவிராஜ்.!

Social Media Bar

நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமடைந்தவர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். மொழி, சத்தம் போடாதே மாதிரியான திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் பிரபலமானவை.

அந்த படங்களுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இப்பொழுது முழுக்க முழுக்க மலையாள சினிமாவில்தான் இவர் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் திரைப்படங்களை இயக்கியும் வருகிறார்.

prithiviraj

prithiviraj

நேற்றைக்கு முந்தைய தினம் இவரது இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் பிரித்விராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ”சினிமாவை கேலி செய்யும் நிறைய சமூக வலைதள பக்கங்களில் நான் இருக்கிறேன்.

அவர்கள் பெரும்பாலும் என்னை பற்றி தவறான ஒரு கருத்தைதான் மக்களிடம் கூறி வருகின்றனர். அதாவது பிரித்திவிராஜ் மரியாதை தெரியாத ஒரு ஆள் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் எனக்கு என்னை பற்றி தெரியும். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது நான் அனைவர் மீதும் மரியாதை செலுத்தக்கூடிய ஒருவர்தான். ஆனால் கேரள மக்கள் என்னை தவறாக புரிந்து வைத்திருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் பிரித்திவிராஜ்.

Articles

parle g
madampatty rangaraj
To Top