Connect with us

இவ்வளவு உயரத்துக்கு வந்த பிறகும் விஜய்க்கு கூட அந்த பெருந்தன்மை இல்லை!.. ட்ரெண்டிங் ஆன ப்ரித்திவிராஜின் பேச்சு!.

prithiviraj vijay

News

இவ்வளவு உயரத்துக்கு வந்த பிறகும் விஜய்க்கு கூட அந்த பெருந்தன்மை இல்லை!.. ட்ரெண்டிங் ஆன ப்ரித்திவிராஜின் பேச்சு!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ப்ரித்திவிராஜ். இவர் தமிழில் மொழி, காவிய தலைவன் மாதிரியான பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவை விடவும் அவருக்கு மலையாள சினிமாவில்தான் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

இந்த நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார் ப்ரித்திவிராஜ். மேலும் திரைப்படம் நடிப்பது மட்டுமின்றி திரைப்படம் இயக்குதல், தயாரித்தல் என பல விஷயங்களையும் செய்து வந்தார் ப்ரித்திவிராஜ். இந்த நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் கோட் லைஃப் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் கோட் லைஃப் குறித்த பேட்டி ஒன்றில் பேசும்போது மிகவும் நேர்மையாக சில விஷயங்களை பேசியிருந்தார் ப்ரித்திவிராஜ். அதில் அவர் கூறும்போது எனது தந்தை திரைத்துறையை சேர்ந்தவர் என்பதால்தான் எனக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்தது.

இல்லை என்றால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஏனெனில் அந்த சமயத்தில் என்னை விட திறமை வாய்ந்த பலரும் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தனர். அவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பை எளிதாகவே வாங்கி விட்டேன். ஆனால் அதில் பெரும் உயரத்தை தொட்டது என்னுடைய உழைப்பினால்தான் என கூறுகிறார் ப்ரித்திவிராஜ்.

ஆனால் நடிகர் விஜய்யில் துவங்கி தற்சமயம் விஜய் சேதுபதியின் மகன் வரை யாருமே தன்னுடைய தந்தை மூலமாகதான் சினிமாவிற்கு வந்தேன் என்பதை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. ஆனால் ப்ரித்திவிராஜ் இவ்வளவு வளர்ந்த பிறகும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறாரே என கூறுகின்றனர் நெட்டிசன்கள்!.

To Top