Tamil Cinema News
நானும் பிரியங்காவும் இப்ப ஒண்ணா இல்ல.. அதிர்ச்சி கொடுத்த கணவர்.!
ரோஜா நாடகத்தின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா. ரோஜா சீரியலில் கதை நாயகியான ரோஜா கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்தார்.
பிரியங்கா நல்காரி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் ஆவார். ஹைதராபாத்தில்தான் இவர் தொடர்ந்து சீரியல்களில் முயற்சி செய்து வந்தார். ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில்தான் நடித்தும் வந்தார்.
இந்த நிலையில்தான் அவருக்கு ரோஜா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ரோஜா சீரியல் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து அடுத்து ரோஜா 2 சீரியலிலும் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா நல்காரி. இந்நிலையில் இவர் ராகுல் வர்மா என்பவருடன் வாழ்ந்து வந்தார். சமீப காலங்களாகவே இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ராகுல் வர்மா இதுக்குறித்து வாய் திறந்துள்ளார். அவர் கூறும்போது வெகு காலங்களுக்கு முன்பே நாங்கள் எங்கள் காதல் வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டோம்.
ஆகஸ்ட் 2024 லேயே பிரியங்கா தனியாக பிரிந்துவிட்டார். எனவே இதை மேலும் பெரிதாக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
