லியோ ஜெயிலரை ப்ரேக் பண்றது கஷ்டம்… அந்த விஷயத்தை செய்யாமல் விட்டுட்டாங்க!.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்!.
தென்னிந்தியாவில் இருந்து பல திரைப்படங்கள் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்த போதும் தமிழ் சினிமாவில் இருந்து ஒரு திரைப்படம் கூட இன்னும் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் சாதனை படைக்கவில்லை.
எனவே அப்படியான ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று தமிழ் இயக்குனர்கள் அனைவரும் நினைக்கின்றனர். இதனால் தமிழில் பேன் இந்தியா திரைப்படங்கள் அதிகமாக வர துவங்கியுள்ளன. வாரிசுக்கு பிறகு விஜய் நடித்துவரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு இந்திய அளவிலேயே ஒரு வரவேற்பு உண்டாகியுள்ளது எனவே இந்த படத்தை பேன் இந்தியா அளவில் வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படமும் அப்படித்தான் வெளியானது.
இது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியில் கூறும்பொழுது ஜெயிலர் வெற்றியடைந்ததற்கான முக்கிய காரணமே வட இந்தியாவில் அந்தப் படத்தை அதிகமாக பிரபலப்படுத்தினர். அதற்கான விளம்பரங்களும் அதிகமாக இருந்தது.
மக்கள் மத்தியில் ஒரு படத்தை பற்றிய விளம்பரங்கள் எவ்வளவு தூரம் போய் சேர்கிறதோ அந்த அளவிற்கு அந்த படத்திற்கான வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஆனால் லியோ திரைப்படத்தைப் பொறுத்தவரை பட குழுவினர் இப்போது வரை வட இந்தியாவில் படத்தை பிரபலப்படுத்துவதற்காகவும் விளம்பரப்படுத்துவதற்காகவும் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
அப்படி செய்யாத பட்சத்தில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ பிரேக் செய்யுமா என்பது கேள்விதான்? எனவே அவர்கள் அந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தனஞ்செயன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்