Latest News
கதையே இல்லாமல் படம் பண்ணுன சுந்தர் சி.. 40 கோடி போச்சு!.. குமுறும் தயாரிப்பாளர்!.
ஒரு படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த படத்தின் கதை. படத்தில் நடிகர், நடிகைகள் நன்றாக நடித்திருந்தாலும் படத்தின் கதை மக்களை சென்றடைந்தால் மட்டுமே அந்த படம் முழுமையாக வெற்றி பெறும்.
எவ்வளவு பெரிய முன்னணி நடிகராக இருந்தாலும், படத்தின் கதை மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் தான் படம் வெற்றி அடையும். அந்த வகையில் பல கோடி செலவுகள் செய்து பிரம்மாண்டமாக படங்கள் எடுத்தாலும் படத்தின் கதை நன்றாக அமையவில்லை என்றால் அந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டு விடும்.
இந்நிலையில் பிரபல ஹீரோவை வைத்து எடுத்த படம் ஒன்று தோல்வியடைந்து அது தயாரிப்பாளருக்கு பெரிய அளவு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த தயாரிப்பாளரே பேட்டி ஒன்றில் அது குறித்து பேசியது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆக்ஷன் திரைப்படம்
ஆக்ஷன் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த படத்தை ரவீந்திரன் டிரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருக்கும் விஷால், தமன்னா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் உளவு அதிகாரிகளாக விஷாலும், தமன்னாவும் பயங்கரவாதியை அழிக்க ஒரு உலகளாவிய பணியை தொடங்குகின்றனர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார். அதிரடி காட்சிகள் கொண்ட படமாக வெளிவந்த போதும் வணிக ரீதியான தோல்வியை சந்தித்தது.
தயாரிப்பாளர் ரவீந்திரன்
இந்தப் படத்தை தயாரித்த ரவீந்திரன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, ஆக்ஷன் திரைப்படம் தோல்வியை சந்தித்ததற்கு முழு காரணமும் நான்தான். ஏனென்றால் இந்த படத்தின் மூலம் நான் பெரும் அளவில் நஷ்டப்பட்டு விட்டேன். சுந்தர் சியும், நானும் நல்ல நண்பர்கள். அவர் என்னிடம் ஒரு படம் இருக்கிறது என கூறினார். நான் தயாரிப்பாளர், படத்தை நீங்கள் தான் எடுக்கப்போகிறீர்கள. உங்களால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தது இல்லை. எனவே படத்திற்கான பட்ஜெட்டை கூறுங்கள் என கேட்டேன். 40 கோடி என அவர் கூறினார். படத்தின் கதையில் ஒரு வரி தான் நான் கேட்டேன். அதன் பிறகு அவர் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என கூறினார்.
40 கோடி பட்ஜெட் என்றவுடன் இதில் படம் செய்து கொடுங்கள். நான் அதன் பிறகு என்னுடைய பிசினஸை கவனித்துக் கொள்கிறேன் என கூறினேன். ஆனால் அந்த படத்தில் கதையே இல்லை. பல நாடுகள் சென்று நாங்கள் எடுத்தோம். மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது எனக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்