News
பிடி சார் திரைப்படம் முதல் நாள் வசூல்!.. ஹிப் ஹாப்பிற்கு மீண்டும் கம் பேக்கா!.
தமிழில் மீசையை முறுக்கு, நான் சிரித்தால் மாதிரியான வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஹிப் ஹாப் ஆதி. ஆரம்பத்தில் இவர் இசையமைப்பாளராகதான் சினிமாவிற்குள் வந்தார். அதன் பிறகு நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதால் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.
வீரன் திரைப்படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் திரைப்படம் எதுவும் வராமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் பிடி சார். இந்த திரைப்படத்தில் காஷ்மீரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் அனிகா, தேவதர்ஷினி, இளவரசு போன்ற முக்கிய நடிகர் நடிகையர்கள் நடித்துள்ளனர். இந்த படம் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறும் கதையை கொண்டுள்ளது என கூறப்படுகிறது. ஓரளவு கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகிறது.
இந்நிலையில் பிடி சார் திரைப்படம் நேற்று மட்டும் 1 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
