Connect with us

எதுக்கு அவருக்கு சாப்பாடு போடல… டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்!.. நடுங்கி போன பாகவதர்…

Cinema History

எதுக்கு அவருக்கு சாப்பாடு போடல… டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்!.. நடுங்கி போன பாகவதர்…

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களில் மிக முக்கியமான ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பும் நற்பெயரும் அனைவரும் அறிந்ததே.

மற்ற நடிகர்களை போலவே சாதரண குடும்பத்தில் பிறந்து நாடகங்களில் நடித்து வந்தவர்தான் எம்.ஜி.ஆரும், எனவே எப்போதும் ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகளை அவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமாக இருந்த சில நட்சத்திரங்களில் முக்கியமானவர் வாலி.

எங்க வீட்டு பிள்ளை போன்ற பல படங்களுக்கு பாடலாசிரியராக வாலி பணிப்புரிந்துள்ளார். ஒருமுறை நட்சத்திரங்கள் பங்கு பெரும் ஒரு விழாவிற்கு வாலி, எம்.ஜி.ஆர், லதா மூவரும் சென்றிருந்தனர். அந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்து வாலி சாப்பிட இருந்தார்.

அப்போது வாலியுடன் பாகவதர் என்கிற ஒருவர் வந்திருந்தார். அங்கு அப்போது நட்சத்திரங்களுக்கு மட்டுமே உணவளித்தனர். அதனால் பாகவதரை வேறு உணவகத்தில் போய் சாப்பிட சொல்லலாம் என நினைத்தார் வாலி. அதற்காக அவர் எழுந்ததும் அதை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார்.

எதற்காக எந்திரிக்கிறீங்க? என எம்.ஜி.ஆர் கேட்க, என்னுடன் பாகவதர் என ஒருவர் வந்துள்ளார். அவரை போய் ஹோட்டலில் சாப்பிட சொல்லிவிட்டு வருகிறேன் என வாலி கூறியுள்ளார். உடனே நீங்கள் அமருங்கள் என கூறிய எம்.ஜி.ஆர் வெளியில் சென்று அந்த பாகவதரை அழைத்துள்ளார்.

அந்த நபர் எம்.ஜி.ஆரே தன்னை அழைப்பதை பார்த்ததும் நடு நடுங்கி போய் பயத்துடன் எம்.ஜி.ஆரிடம் சென்றுள்ளார். சாப்பிடும் இடத்திற்கு அவரை அழைத்து சென்ற எம்.ஜி.ஆர் தனக்கு அருகில் அந்த நபரை அமரவைத்து சாப்பிட வைத்தார். இப்படி யாரிடமும் வேற்றுமை பார்க்காதவர் எம்.ஜி.ஆர் என வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top