Tamil Cinema News
3 நாளில் இவ்வளவு வசூலா? புஷ்பா 2 வசூல் நிலவரம்..!
தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்வது வழக்கமாகி வருகின்றன. இந்திய அளவில் அதிகமாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் தென்னிந்திய திரைப்படங்களின் பெயர்தான் அதிகமாக இருக்கும்.
அப்படியாக ஆயிரம் கோடி வசூல் கொடுத்த திரைப்படங்களில் புஷ்பா திரைப்படமும் ஒன்று. அந்த திரைப்படம் கொடுத்த பெரிய வசூல் காரணமாக புஷ்பா படத்திலிருந்து இரண்டு பாகங்களுக்கு திட்டமிட்டு தான் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் பெரும் எதிர்பார்பிற்கு நடுவே வெளியானது. அந்த எதிர்பார்ப்பை தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
புஷ்பா 2 திரைப்பட வசூல்:
தமிழ் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் மற்ற மொழிகளில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் வெளியான மூன்று நாட்களில் 570 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது புஷ்பா 2 திரைப்படம். எப்படியும் இந்த திரைப்படமும் இன்னும் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
