News
ராஷ்மிகா மேல கேஸ் போட்டு விட்டுடுவேன் பார்த்துக்கோங்க!.. எச்சரிக்கை கொடுத்த ரசிகர்- இவ்வளவு கோபம் ஆகாதுப்பா!..
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதே சமயம் அதிக சர்ச்சைக்கு உள்ளாகும் நடிகையாகவும் இவர் இருந்து வருகிறார்.
பொதுவாக சமூக வலைதளங்களில் ஒவ்வொருவர் குறித்தும் எதிர்மறையான விமர்சனங்கள் வருவது என்பது சகஜமான விஷயம் தான். யூடியூப்பில் துவங்கி இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை அனைவரையும் எதிர்மறையாக திட்டுவதற்கு ஒரு குழு இருக்கும்.
தெலுங்கில் வரவேறுப்பு:
அப்படி இருக்கும் பொழுது ராஷ்மிகா தன்னை தொடர்ந்து எதிர்மறையான விமர்சனம் அளிப்பவர்களுக்கு ரியாக்ட் செய்து வருகிறார். பொதுவாக நடிகைகள் இப்படி இருப்பவர்களை கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.

ஆனால் ராஷ்மிகாவை பொறுத்தவரை அதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறார். தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்சமயம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்திய திரைப்படமாக புஷ்பா திரைப்படம் இருக்கிறது.
இந்திய அளவில் ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஹிட் கொடுத்த திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது. அதை வைத்துதான் ஹிந்தியில் அனிமல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் ராஷ்மிகா.
தேதி மாறிய படம்:
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் ராஷ்மிகா. புஷ்பா 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருந்தது அதற்கான அறிவிப்புகளும் வெளிவந்திருந்தன. ஆனால் திடீரென தற்சமயம் படத்தின் தேதியை மாற்றி இருக்கின்றனர்.

டிசம்பரில் தான் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் கூறும் பொழுது என்ன விளையாடுறீங்களா படத்துக்காக இவ்வளவு நாள் காத்திருக்கும் ரசிகர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் தேதியை மாற்றி விட்டீர்கள் என கூறியிருந்தார்.
மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மீது வழக்கு தொடுக்க போகிறேன் என்று எழுதியிருந்தார் அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் குழு எங்களுக்கு உங்கள் நிலைமை புரிகிறது ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை படத்தை வெளியிடும் பொழுது முழுமையாக தானே வெளியிட முடியும் என்று பதில் அளித்து இருக்கிறார்.
