Movie Reviews
எல்லை சாமியாக களம் இறங்கிய அல்லு அர்ஜூன்!. புஷ்பா 2 டீசர் எப்படியிருக்கு!.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கான திரைப்படம்தான் புஷ்பா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்திற்கு அப்போதே பெரும் வரவேற்பு கிடைத்தது. அல்லு அர்ஜுனோடு ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா போன்றோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் முதல் பாகத்திலேயே ஹீரோவிற்கு அதிக கெத்து காமிக்கப்பட்டிருந்தது.
இதுவரை சினிமா பார்க்காத புது ரகமான கதாபாத்திரமாக புஷ்பராஜின் கதாபாத்திரம் இருந்தது. கடத்தல் லாரியை கிணற்றுக்குள் தள்ளிவிடுவது மாதிரியான காட்சிகள் எல்லாம் சினிமா ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் சென்று கொண்டிருந்தன.

இந்த நிலையில் இன்று அந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் புடவை கட்டிக்கொண்டு முகத்தில் நீல வண்ணத்தை பூசிக்கொண்டு கிட்டத்தட்ட எல்லைச்சாமி மாதிரியான தோற்றத்தில் வருகிறார் அல்லு அர்ஜூன்.
போதை கடத்தல் செய்யும் நபராக இருந்தாலும் கூட அந்த ஊர் மக்களுக்கு எல்லைச்சாமியாக மாறுவான் புஷ்பராஜ். இப்படிதான் கதை இருக்கும் என்று சில அனுமானங்களும் இருக்கின்றன.
இதுவரை சினிமாவில் ஒரு கதாநாயகனை புடவை கட்டி இவ்வளவு மாஸாக காட்சிகள் வைத்ததில்லை என கூறும் அளவிற்கு அமைந்துள்ளது புஷ்பா 2 வின் டீசர் காட்சிகள்.
