Cinema History
ரஜினி சாரை அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. ராதா ரவியிடம் உபதேசம் பண்ணி சிக்கிய உதவி இயக்குனர்!.
ராதா ரவி பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் முத்து படத்தில் நடித்தப்போது அவருக்கு நடந்த நிகழ்வை ஒரு பேட்டியில் கூறியுள்ள்ளார்.
அதில் கூறும்போது, ”முத்து திரைப்படம் படமாக்கப்பட்டப்போது முதல் காட்சியாக என்னுடைய காட்சிகள்தான் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் எனக்கு ஜமீன் மாதிரி மேக்கப் எல்லாம் போட்டு அழைத்து வந்ததும் எனக்கே அது பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது.
இதைதான் நான் எதிர்பார்த்தேன் என்பதாக எனக்கு இருந்தது. ஆனால் அங்கு எனக்கென்று ஒரு உதவி இயக்குனர் வந்து சேர்ந்தான்” என்கிறார் ராதா ரவி. படப்பிடிப்பில் முத்து கதாபாத்திரத்தை ராதா ரவி டேய் முத்து என்றுதான் அழைப்பார். ஏனெனில் கதைப்படி முத்துவை விட வயதான திமிரான ஜமீனாக ராதா ரவி இருந்தார்.

இந்த நிலையில் அங்கு வந்த உதவி இயக்குனர் ராதா ரவியிடம் வந்து சார் ரஜினி சாரை டேய் என்றெல்லாம் அழைக்காதீர்கள் சார் என கூறியுள்ளார். அப்படியென்றால் அவரை சார் என அழைக்கவா என ராதா ரவி கேட்க அப்படியில்லை. அவரை வா போ என்று மட்டும் அழையுங்கள் என கூறியுள்ளார் உதவி இயக்குனர்.
உடனே ரஜினிகாந்திடம் சென்று சார் உங்களை போடா வாடான்னு அழைப்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என ராதா ரவி கேட்டுள்ளார். அதெல்லாம் ஒன்னும் இல்லை சார், யார் உங்கக்கிட்ட அப்படி சொன்னது என கேட்டு சத்தம் போட்டுள்ளார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வை பேட்டியில் பகிர்ந்துள்ளார் ராதா ரவி.
