News
சூப்பர் ஹீரோ கதைதான் அது!.. லாரன்ஸை வைத்து லோகேஷ் போட்ட திட்டம்!.
லோகேஷ் கனகராஜிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே சூப்பர் ஹீரோ கதை அமைப்பில் ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து திரைப்படம் இயக்கும்போது அதில் மாஸ் காட்சிகள் அதிகம் வைக்க வேண்டி இருந்ததால் அவரால் சூப்பர் ஹீரோ படங்களை இயக்க முடியவில்லை.
லோகேஷ் மாநகரம் திரைப்படத்தை முடித்த உடனேயே அவருக்கு சூர்யா ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தார். இரும்புக்கை மாயாவி என்கிற திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்கவிருந்தார் லோகேஷ். ஆனால் அப்போதைய சமயத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை.

அந்த கதையும் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ கதையாகதான் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் அவர் எழுதிய பல கதைகளை அவரது உதவி இயக்குனர்கள் படமாக்குவதற்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் அடுத்து நடிக்கவிருக்கும் பென்ஸ் என்கிற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்தான் தயாரிக்கிறார்.
மேலும் இதற்கான கதையையும் லோகேஷ் கனகராஜ்தான் எழுதியிருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரை பார்க்கும்போது அதில் ஒரு முகமூடி இருப்பதை பார்க்க முடிகிறது. இதை வைத்து இந்த திரைப்படம் பேட்மேன் மாதிரியான ஒரு சூப்பர் ஹீரோ படமாகத்தான் இருக்கும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
