Connect with us

திடீர்னு மீட்டிங் போட்ட கமல் ரஜினி!.. ஏதோ சம்பவம் காத்திருக்கு போல…

rajini kamal

News

திடீர்னு மீட்டிங் போட்ட கமல் ரஜினி!.. ஏதோ சம்பவம் காத்திருக்கு போல…

Social Media Bar

Rajinikanth and Kamalhaasan : 70களின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவின்  ஜாம்பவான்கள் இருவர். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவையே ஆட்சி செய்தார்கள் என்றும் கூட சொல்லலாம். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அந்த முயற்சியை கைவிட்டு இன்று நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

உலக நாயகனுக்கு அரசியல் ஆசை கைகூடவே ஒரு தனி அரசியல் கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அதிகபடியான வாக்குகள் பெற்று தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் ஆரம்பத்தில் இருந்த அந்த வளர்ச்சி இன்று கமல்ஹாசனின் கட்சியில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் காரணம் முக்கியப்புள்ளிகள் சிலர் கமல்ஹாசனின் கட்சியைவிட்டு விலகி ஒரு பெரிய கட்சியில் சேர்ந்துவிட்டனர்.

அதனையடுத்து மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டியுள்ள கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கரின் இந்தியன்-II படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியன் – II படபிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. ரஜினியின் 170 வது படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தற்போது நடைபெற்றுவருவதால் படப்பிடிப்பு தளத்தில் இரு ஜாம்பவான்களும் சந்தித்துக்கொண்டது இருவரின் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று விஜய், அஜித் ரசிகர்கள் எப்படியோ அப்படித்தான் 90களில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் தொழில் போட்டி நடந்துவந்த நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு மிகப்பெரிய போரே நடந்தது. ரஜினிகாந்த் உடனான இன்றைய சந்திப்பு கமல்ஹாசனின் எதிர்கால அரசியலுக்கு ஆதாயமாக அமையுமா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

To Top