வாயை விட்டு மாட்டிக்கிட்டீங்களே சார்! வேட்டையன் படத்துக்கு இப்ப என்ன பண்ண போறாரு!.

இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் தற்சமயம் ரஜினி நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டுமே ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் படம் திரைக்கு வர இருக்கிறது.

படம் தா.செ ஞானவேல் படம் என்பதாலேயே அதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏனெனில் அவர் ஏற்கனவே ஜெய் பீம் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதற்கு எக்கச்சக்கமான வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த படத்திற்கும் கூட அந்த அளவில் வரவேற்பு இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாவதாக நேற்று தகவல்கள் வெளியானது.

போட்டியில் வேட்டையன்:

இதனை தொடர்ந்து பலருக்கும் இது அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக இருக்கிறது. ஏனெனில் இந்த நாளில்தான் கங்குவா படமும் வெளியாக இருக்கிறது. கங்குவா படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

Rajini vettaiyan
Rajini vettaiyan
Social Media Bar

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசிய கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது வேட்டையன் படத்தோடு நாங்கள் போட்டி போட மாட்டோம். ஒரு வேளை வேட்டையன் படம் எங்கள் படத்தோடு வெளியானால் நாங்கள் தேதியை மாற்றி விடுவோம் என கூறினார்.

அதை போலவே தற்சமயம் கங்குவா படத்திற்கு போட்டியாக வேட்டையன் வெளியாக இருக்கிறது. இதனால் ஞானவேல்ராஜா பட வெளியீட்டு தேதியை மாற்றி வைப்பாரா என்பது இப்போது கேள்வியாக இருக்கிறது.