இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் இப்பொழுது இருக்கும் டாப் இயக்குனர்களின் முக்கியமானவர் என்று கூறலாம். அதிகமான சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனராக இவர் இருந்து வருகிறார்.
பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றால் பெரும் வெற்றியை கொடுக்கும் படங்களாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தது.
ஏனெனில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுக்கு விக்ரம் என்கிற வெற்றி படத்தையும் ரஜினிகாந்துக்கு கூலி என்கிற வெற்றி படத்தையும் கொடுத்திருக்கிறார் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் பிறகு லோகேஷ் கனகராஜின் கதை பிடிக்கவில்லை என்று இருவருமே மறுத்துவிட்டனர் இந்த நிலையில் அடுத்து இயக்குனர் நெல்சன் தான் அந்த படத்தை இயக்கப் போகிறார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆனால் இதற்கான உண்மையான காரணம் வேறு என்று கூறுகிறார் பத்திரிக்கையாளர் அந்தணன். அவர் கூறும் பொழுது லோகேஷ் கனகராஜை பொருத்தவரை படப்பிடிப்பு தளத்தில் சரியான நேரத்திற்கு அவர் வரமாட்டார்.
ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வரக்கூடியவர். ஆனால் கூலி திரைப்படத்தை எடுக்கும்பொழுது ரஜினியே வந்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தான் இந்த படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜை விளக்கி இருக்கின்றனர் என்று அவர் கூறி இருக்கிறார்.
 
			 
			






