31 வருடங்களுக்கு பிறகு அந்த இயக்குநருடன் இணையும் ரஜினி – தமிழ் சினிமாவில் திடீர் டிவிஸ்ட்

தமிழில் மாஸ் ஹீரோ என கூறினாலே அனைவருக்கும் நினைவு வரும் ஒரு முகம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்தான். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளாக இன்னும் மார்கெட் குறையாமல் இளம் நடிகர்களுக்கு போட்டியாக ரஜினி இருந்து வருகிறார்.

அவரது ஜெயிலர் படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. அடுத்து ரஜினி யார் படத்தில் நடிக்க போகிறார் என பார்த்தால், டான் திரைப்படத்தின் இயக்குநரான சிபி சக்ரவர்த்தியோடு ரஜினி இணைவதாக கூறப்படுகிறது. டான் படத்தை திரையில் பார்த்த போதே அந்த படத்தை ரஜினி அவர்கள் வெகுவாக பாராட்டியிருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தோடு ரஜினி இணைந்து படம் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது. மணிரத்னம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முடிந்த பிறகு இந்த பட வேலைகளை துவங்கலாம் என கூறப்படுகிறது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியும் மணிரத்னமும் இணைந்து ஒரே ஒரு படம் மட்டுமே கொடுத்துள்ளனர். அது 1991 ஆம் ஆண்டு வந்த தளபதி திரைப்படம். ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களில் தளபதியும் ஒன்று. அப்படியிருக்கையில் மீண்டும் இவர்கள் கூட்டணி சேரப்போவது என்பது தமிழ் சினிமாவிலேயே ஒரு விறு விறுப்பான செய்தியாக மாறியுள்ளது.

மணிரத்னம், ரஜினி காம்போ என்றால் கண்டிப்பாக மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும். எனவே அதை நிறைவு செய்யும் வகையில் படம் அமைய வேண்டும்.

சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்திற்கு பிறகு இந்த படத்தின் வேலைகள் துவங்கலாம் என கூறப்படுகிறது.

Refresh