முக்கிய நடிகர்களை களத்தில் இறக்கும் ரஜினி..! – தலைவர் 170 இல் யாரெல்லாம் இருக்காங்க.

தற்சமயம் நடிகர் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு அடுத்து ரஜினிகாந்தின் 170 படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற ஹிட் படத்தை கொடுத்த காரணத்திற்காக ரஜினி இவர் படத்தில் நடிக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

படத்தின் திரைக்கதை வேலைகள், நடிகர் / நடிகைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற வேலைகள் போய்க்கொண்டுள்ளன. இந்த படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், அரவிந்த் சாமி, வடிவேலு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வடிவேலு, ரஜினி காம்போவில் இன்னொரு படம் வருவது சிறப்பாக இருக்கும் பலரும் இதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Refresh