Connect with us

எந்தா சாரே மனசிலாயோ… கமல் போட்ட ஸ்கெட்சை மொத்தமாய் கலைத்துவிட்ட ரஜினி!..

Cinema History

எந்தா சாரே மனசிலாயோ… கமல் போட்ட ஸ்கெட்சை மொத்தமாய் கலைத்துவிட்ட ரஜினி!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக விஜய்யும் அஜித்தும் இருந்து வந்தனர். பெரிய ரசிகர்களையும், பெரும் பட கலெக்‌ஷனையும் இருவரும் கொடுத்து வந்தனர். ஆனால் அவர்களை ஓரம் தள்ளிவிட்டு தற்சமயம் ரஜினியும் கமலும் மறுபடியும் போட்டியில் இறங்கியுள்ளனர்.

விக்ரம் திரைப்படம் வெளியானப்பிறகு மீண்டும் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு அதிகமாக ஓடி பெரும் ஹிட் கொடுத்தது. அந்த அளவிற்கு ஹிட் கொடுத்ததால் அடுத்து கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் சம்பளத்தை 150 கோடிக்கு உயர்த்தினார்.

ஏனெனில் ரஜினி நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படமும் அந்த சமயத்தில் பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. எனவே ரஜினிக்கு நிகரான சம்பளத்தை பெற்றுவிடலாம் என நினைத்தார் கமல்.

ஆனால் அதற்கு எதிராக பெரும் வசூலை கொடுத்து மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரஜினி. ஜெயிலர் படம் கொடுத்த வசூலின் காரணமாக அடுத்த படத்திற்கு இவர் 200 கோடி சம்பளம் வாங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதே சமயம் கமல்ஹாசனுக்கு சம்பளம் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

To Top