News
விஜய்யோடு போட்டி போட வேண்டாம்!… விட்டுக்கொடுத்த ரஜினி!.. லோகேஷ்தான் காரணமா?..
விஜய் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோட் திரைப்படத்தை விடவும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மீதுதான் பொது மக்களும், மீடியாக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே தளபதி நடிப்பார் என்பதால் அந்த படங்கள் குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் முதல் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் நாள் வெளியிட முடிவு செய்திருக்கிறதாம் கோட் படக்குழு. இந்த திரைப்படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல்தான் கண்டிப்பாக வெளியாக இருக்கிறது என கூறப்படுகிறது.

இதே நிலையில் தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் அன்னோன்ஸ்மெண்ட் மற்றும் படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளை ஏப்ரல் 14 இல் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் பிறகுதான் அதே தேதியில் விஜய் படத்தின் பாடல் வெளியாகிறது என தெரிந்துள்ளது.
இந்த நிலையில் விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் க்ளிம்ஸ் வெளியிடும் தேதியை மாற்றுமாறு படக்குழுவிடம் கூறிவிட்டாராம். ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் போட்டி என்று பல காலங்களாக பேச்சு இருந்து வந்தது. இப்போதுதான் அது அமைதியாகி இருக்கிறது.

இப்போது மீண்டும் ஒரே நாளில் பட அப்டேட்டுகளை வெளியிட்டால் அது பிரச்சனையை உண்டாக்கும் என்பதால்தான் ரஜினிகாந்த் தேதியை மாற்றியுள்ளார் என கூறப்படுகிறது. அதே சமயம் ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.
அவர்தான் தலையிட்டு இப்படி தேதியை மாற்றியுள்ளார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
