ரஜினி கேட்ட அந்த ஒரு கேள்வி.. தனது பழக்கத்தை மாற்றி கொண்ட ஸ்ருதி..!
நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் கமல்ஹாசனும் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் மகள் கதாபாத்திரத்தில்தான் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்று பலரும் நினைத்து வந்தனர்.
ஆனால் அப்படி இல்லை ரஜினிகாந்த் நண்பனான சத்யராஜின் மகளாக சுருதிஹாசன் நடிக்கிறார் என்கிற தகவல் ட்ரைலர் வெளியான பிறகு தான் தெரிந்தது.
எனவே ரஜினியின் நண்பன் சத்யராஜ் காணாமல் போவதை வைத்து கூலி திரைப்படத்தில் கதை செல்கிறது என்பதும் தெரிகிறது. இந்த நிலையில் சுருதிஹாசன் ஒரு பாடகி என்பது பலரும் அறிந்த விஷயமே நிறைய படங்களில் பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.
இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பில் எப்போதும் சுருதிஹாசன் பாடிக்கொண்டே இருப்பாராம். அதனை பார்த்த ரஜினிகாந்த் ஒருநாள் எப்போதும் பாடிக்கொண்டேதான் இருப்பியா என்று சாதாரணமாக கேட்டிருக்கிறார்.
ஆனால் ஒருவேளை ரஜினிகாந்தை தொந்தரவு செய்கிறோமோ என்று நினைத்ததால் சுருதிஹாசன் அதற்கு பிறகு பாடுவதை நிறுத்திவிட்டாராம் ஒருநாள் ரஜினிகாந்தே இதை பார்த்துவிட்டு ஏன் இப்போது நீ பாடல்கள் பாடுவதில்லை என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பிறகும் பாடாமல் இருந்த சுருதிஹாசன் பிறகுகூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடி இருந்தார் இதனை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.