முன்னால் சூப்பர் ஸ்டார்னு சொல்றியா? – பத்திரிக்கையாளரின் வீடு புகுந்து பிரச்சனை செய்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த்.  தற்சமயம் இருக்கும் நாயகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் ரஜினிகாந்த்தான்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது யூ ட்யூப் தளத்தில் ரஜினி குறித்து பேசிய விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்பு அவரது யூ ட்யூப் சேனலில் பேசும்போது முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரஜினி என பேசினார்.

அதாவது தற்சமயம் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய்தான் என்கிற அர்த்தத்தில் அதை அவர் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் நேராக பிஸ்மியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளனர்.

அங்கே அவரிடம் எப்படி சூப்பர் ஸ்டாரை அப்படி பேசலாம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த நிலையில் விஜய்தான் நம்பர் ஒன். அதை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறி சமூக வலைத்தளங்களில் பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

Refresh