Cinema History
கமல்கிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய ரஜினிகாந்த்!..
Actor Kamalhaasan and Rajinikanth : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் போட்டி நடிகர்களாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அறியப்படுகிறார்கள். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படம் முதலே செல்வாக்கு மிக்க நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார்.
அவரது முதல் திரைப்படமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திற்கே அவர் நல்ல சம்பளம் வாங்கினார். சொல்ல போனால் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்தப்போதே பெரும் நடிகராக இருந்தார் கமல்ஹாசன். அப்போதெல்லாம் கமல்ஹாசனை போல தானும் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்பது ரஜினிகாந்தின் பெரும் ஆசையாக இருந்தது.

இதனாலேயே அவர்கள் இருவருக்கும் பெரும் நட்பு இருந்தது. இப்போது வரை அந்த நட்பு நீடித்து வருகிறது. ஆனால் சின்ன நடிகராக இருந்தப்போதே கமல்ஹாசனிடம் திட்டு வாங்கியுள்ளார் ரஜினிகாந்த். இதுக்குறித்து அவர் ஒரு மேடையில் பேசும்போது கமல் பெரிய கோபக்காரர்.
அவரது கோபத்தை பொறுத்தவரை அதில் 10 சதவீதத்தைதான் நீங்கள் எல்லாம் பார்த்துள்ளீர்கள். ஆனால் 100 சதவீத கோபத்தை நான் பார்த்துள்ளேன். எனவேதான் நான் எப்போதும் கமல்ஹாசனிடம் ஜாக்கிரதையாக இருப்பேன் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
