Cinema History
வழி செலவுக்கே காசில்லாமல் இருந்த நடிகை!.. உதவிக்கரம் நீட்டிய ரஜினிகாந்த்…
தமிழ் சினிமாவில் எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் கூட ரஜினிகாந்த் திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இப்போதும் கூட ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.
ரஜினிகாந்த ஆரம்பக்காலத்தில் சினிமாக்காரர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அப்போது ரஜினிகாந்திற்கு முக்கியமான திரைப்படமாக இயக்குனர் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படம் இருந்தது. முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினிகாந்தோடு இணைந்து நடிகை ரமா பிரபா நடித்திருந்தார்.
பிறகு தமிழ் சினிமாவில் ரமா பிரபாவின் மார்க்கெட் குறைந்தது. அதனை தொடர்ந்து அவரது பட வாய்ப்புகளும் குறைய துவங்கின. இந்த நிலையில் மிகுந்த வறுமைக்கு உள்ளானார் ரமா பிரபா. எனவே திரும்ப சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என முடிவெடுத்தார் ரமா.
ஆனால் அதற்கு கூட அவரிடம் காசு இல்லாமல் இருந்தது. அப்போதுதான் அவருக்கு ரஜினிகாந்த் நினைவு வந்தது. நேராக ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றார். அவரது நிலையை பார்த்ததும் ரஜினி காந்திற்கே வருத்தமாகிவிட்டது.
அப்போதுதான் ஒரு படத்தில் நடிப்பதற்காக 40,000 ரூபாயை அட்வான்ஸாக வாங்கியிருந்தார் ரஜினிகாந்த். அதை உடனே ரமாவிடம் கொடுத்து இதை வைத்து ஏதாவது தொழில் செய்துக்கொள்ள சொன்னார். பிறகு அந்த காசை வைத்து சொந்த ஊரில் வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் ரமா.
