Connect with us

என்ன உதவி இயக்குனர்களுக்கு எல்லாம் 2000 தான் சம்பளமா? இயக்குனர் செயலால் கடுப்பான ரஜினிகாந்த்!.. ஆடிப்போன உதவி இயக்குனர்கள்!.

Cinema History

என்ன உதவி இயக்குனர்களுக்கு எல்லாம் 2000 தான் சம்பளமா? இயக்குனர் செயலால் கடுப்பான ரஜினிகாந்த்!.. ஆடிப்போன உதவி இயக்குனர்கள்!.

Social Media Bar

Rajinikanth : தமிழ் சினிமாவிலேயே 70 வயதை கடந்த பிறகும் கூட ஒரு நடிகர் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான் என்று கூறவேண்டும். ரஜினிகாந்தை தொடர்ந்தே தற்சமயம் கமல்ஹாசன் கதாநாயகனாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

ஆரம்ப கட்டத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். உணவுக்கே கஷ்டப்பட்ட தான் சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தார் ரஜினிகாந்த். நடிப்பு பயிற்சி பள்ளியில் அவர் நடிக்க கற்றுக் கொண்டிருந்த பொழுது தங்குவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டதாக சில பிரபலங்கள் கூறுவது உண்டு.

இதனால் கடைநிலை ஊழியர்களுக்கு சினிமாவில் சம்பளம் எவ்வளவு என்பது ரஜினிகாந்திற்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேலைகள்தான் சினிமாவில் அவர் செய்து வந்தார் அப்பொழுது மிகச் சொற்பமான ஒரு தொகையைதான் அவருக்கு சம்பளமாக கொடுத்தனர்.

ரஜினிகாந்த் பெரும் நடிகர் ஆன பிறகு சில திரைப்படங்களை அவர் தயாரித்து வந்தார். அப்படி ரஜினி தயாரிப்பில் உருவான திரைப்படம் வள்ளி வள்ளி. வள்ளி திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்த பொழுது அதில் சிலர் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தனர்.

அவர்களுக்கு 5000 ரூபாய்தான் மாத சம்பளமாக வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு தெரியாது இந்த நிலையில் ஒருமுறை இந்த செய்தியை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் இயக்குனரை அழைத்து மற்ற படங்கள் போல அவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்க வேண்டாம்.

இது நமது படம் எனவே அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுங்கள் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த் .அதனை தொடர்ந்து ஒவ்வொரு உதவி இயக்குனருக்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தொகையை சம்பளமாக பார்த்ததும் உதவி இயக்குனர்களே அதிர்ச்சியாகியுள்ளனர்.

To Top