News
விஜய்யின் அரசியல் எதிர்க்காலம் எப்படியிருக்கும்!.. பத்திரிக்கையாளரிடம் அரை மணி நேரம் வறுத்து எடுத்த ரஜினிகாந்த்!..
திரை பிரபலங்கள் அரசியலுக்கு வருவது என்பது தொடர்ந்து வாடிக்கையாக உலகம் முழுக்கவே சினிமாவில் நடந்து வரக்கூடிய ஒரு விஷயம்தான் ஏனெனில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருவரால் தான் அரசியலில் எளிதாக இடத்தை பிடிக்க முடியும்.
அப்படி பார்க்கும் பொழுது சினிமா பிரபலங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் கட்சியை துவங்கி இருக்கிறார் இன்னும் அந்த கட்சிக்கான கொடி மற்றும் சின்னங்கள் ஆகியவை அறிவிக்கப்படாமல் இருக்கின்றது.

அதிகப்பட்சம் இந்த கட்சி தேசிய கட்சியாக பதிவு செய்யப்பட்ட பிறகே கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 1990களில் இருந்து கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியவர் நடிகர் ரஜினிகாந்த்.
ஆனால் இறுதி வரை அவர் கட்சியை துவங்கவே இல்லை ஆனால் விஜய்யை பொறுத்தவரை கட்சி ஆரம்பிப்பதாக கூறிய ஒரு சில வருடங்களிலேயே கட்சியை துவக்கி விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்தை நேர்காணல் செய்வதற்காக பத்திரிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தாராம்.

அப்பொழுது விஜய்யின் அரசியல் வருகை மக்கள் மத்தியில் எப்படியான அலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று விசாரித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தொடர்ந்து விஜய் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கின்றன போன்ற தகவல்களையும் கேட்டிருக்கிறார்.
அதாவது விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து ரஜினி ஆர்வம் காட்டி வருகிறார். தன்னால்தான் அரசியலுக்கு வர முடியவில்லை தமிழ் சினிமாவை சேர்ந்த மற்றொரு நடிகராவது வருகிறாரே என்கிற ஆர்வம் ரஜினியிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
