ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இப்போது உருவாகுமா என்பது கேள்வியாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் ரஜினிகாந்த் அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதேபோல நடிகர் கமல்ஹாசனும் அடுத்து இந்த கூட்டணி திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இருவருமே அந்த படத்தை கொஞ்சம் தாமதமாகதான் துவங்க இருக்கின்றன என்று தெரிகிறது.
முக்கியமாக இயக்குனரை காட்டிலும் படத்தின் கதை அம்சத்திற்கு தான் இருவருமே முன்னுரிமை கொடுப்பதாக தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்தன.

ரஜினிகாந்த் எடுத்த முடிவு:
ஆனால் லோகேஷ் சொன்ன கதைகளம் இவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மூன்று கதைகளை கூறியதாகவும் அந்த மூன்று கதையுமே ரஜினிக்கும் கமலுக்கும் அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே இருவருக்கும் தகுந்த மாதிரி கதையை கூறும் இயக்குனருக்கு தான் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று இவர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கும் பல இயக்குனர்களுக்கு இவர்களை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.








