Cinema History
ரஜினிகாந்தின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு நாவல்.. அது மட்டும் இல்லைனா அவ்வளவுதான்!..
Rajinikanth: இப்போது தமிழ் திரையுலகில் உள்ள டாப் நடிகர்களிலேயே முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு உண்டான வரவேற்பு என்பது பல வருடங்களாக அப்படியேதான் இருந்து வருகிறது.
இப்போதும் அவரது திரைப்படங்களுக்கு உள்ள மதிப்பு குறையவில்லை. ஆனால் ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானப்போது ஆயிரங்களில்தான் ரஜினிகாந்தின் சம்பளம் இருந்தது.
இந்த காலக்கட்டத்தில்தான் சினிமாவில் கதையாசிரியராக இருந்து வந்தவர் மகேந்திரன். மகேந்திரனுக்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது. ஏனெனில் அவர் கதை எழுதிய திரைப்படங்கள் பலவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் முக்கியமான திரைப்படம் தங்கபதக்கம்.

இந்த நிலையில் வரிசையாக பட வாய்ப்புகள் வந்ததால் அவரும் திரைக்கதை எழுதி கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் படத்திற்கு திரைக்கதைகளே எழுத முடியவில்லை.
இந்த நிலையில் ஏதாவது நாவலை படித்து அதில் இருந்து படத்திற்கான திரைக்கதையை எழுதலாம் என முடிவெடுத்தார் மகேந்திரன். இந்த நிலையில்தான் முள்ளும் மலரும் என்னும் நாவல் அவருக்கு கிடைத்தது. அந்த நாவலை படிக்கும்போதே அந்த காளி என்கிற கதாபாத்திரம் மீது மகேந்திரனுக்கு அதிக விருப்பம் ஏற்பட்டது.
புலியை விரட்ட போகும் காளி அதனால் கையை இழப்பதாக கதை எழுதப்பட்டிருந்தது. அதோடு அந்த நாவலை மூடி வைத்த மகேந்திரன் அவர் இஷ்டத்துக்கு ஒரு கதையை எழுதி திரைக்கதை அமைத்தார். அந்த கதையை அவரே திரைப்படமாக்க நினைத்தார்.

இதனால் முள்ளும் மலரும் திரைப்படம் தயாரானது. ரஜினிகாந்த் இதில் காளி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் ரஜினிகாந்தின் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வர துவங்கின.
அப்படி ஒரு முக்கியமான திரைப்படம் உருவாவதற்கு காரணமாக இருந்தது ஒரே ஒரு நாவல்தான்!.
