Connect with us

கமலை விட நான் பெரிய ஆள்னு சொன்னா அதை விட பெரிய பைத்தியகாரத்தனம் வேற இல்ல! –  ரஜினிக்கு இருக்கும் பெரிய மனசு!

Cinema History

கமலை விட நான் பெரிய ஆள்னு சொன்னா அதை விட பெரிய பைத்தியகாரத்தனம் வேற இல்ல! –  ரஜினிக்கு இருக்கும் பெரிய மனசு!

Social Media Bar

சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்காகவே பிறந்தவர் ரஜினிகாந்த் என சொல்லும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக, நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி படங்கள் திரையில் ஹிட் அடிக்கக் கூடியவை.

வந்த காலம் முதல் இப்போது வரை திரையில் இன்றும் பிரபலமாகவே இருக்கும் ஒரு நாயகர் ரஜினி. ஆனால் அவர் அதிகமாக படங்கள் நடித்த சமகாலத்தில் அவருக்கு மிகப்பெரும் போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்.

தீபாவளி பொங்கல் போன்ற சமயங்களில் இப்பொழுது விஜய், அஜித் திரைப்படங்கள் வெளியாவது போல அப்போதைய கால கட்டங்களில் ரஜினி கமல் இருவரின் திரைப்படங்களே போட்டி போட்டுக் கொண்டு வெளியாகின.

என்னதான் போட்டி நடிகர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே நண்பர்களாக இருந்தவர்கள். சொல்லப்போனால் ரஜினி முதலில் கமலுடன் சேர்ந்துதான் திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் பல பேட்டிகளில் ரஜினியே கமலை பாராட்டி பல விஷயங்களை பேசி உள்ளார்.

ஒரு பேட்டியில் ரஜினியிடம் ”எப்படி உங்கள் போட்டி நடிகரை பாராட்டி அனைத்து பேட்டிகளிலும் பேசுகிறீர்கள் என கேட்கப்பட்டது அப்போது ரஜினி கூறும்போது நான் சினிமாவிற்கு வரும்போது கமல்ஹாசன் பெரும் நடிகராக இருந்தார். அப்போது நான் ஒரு அறிமுக நடிகர் ஆனால் கமல் அப்போதைய பிரபலமான நடிகராக இருந்தார்.

காரில் அவர் பக்கத்தில் அமர்ந்து செல்வதே அப்போது எனக்கு மிகப்பெரும் பாக்கியமாக இருந்தது. இப்போது நான் மிகப்பெரும் நடிகனாக ஆகிவிட்டேன் என்பதற்காக கமலை விட நான் பெரிய நடிகன் என கூறிவிட முடியாது. அப்போது கமலை பார்த்தபோது எனக்கு எப்படி வியப்பாக இருந்ததோ இப்போதும் அது அப்படியே தான் இருக்கிறது என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

To Top