Cinema History
ரஜினியாலேயே அதுல கால்வாசிதான் செய்ய முடிஞ்சுது!.. விஜய்லாம் சான்ஸே இல்லை!.. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பண்ணீட்டாரா?
Rajini and Vijay : சில வருடங்களாகவே அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நடிகர் விஜய் தற்சமயம் ஒரு வழியாக அரசியலுக்கு வந்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற ஒரு கட்சியையும் துவங்கி விட்டார்.
கட்சி துவங்குவதற்கு முன்பிருந்தே அரசியல் ரீதியாக சில வேலைகளை துவங்கி விட்டார் விஜய். பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை கொடுப்பது என்று பல உதவிகளை செய்ய தொடங்கினார்.

ஆனால் இது எதையுமே அவர் ஏன் அரசியலுக்கு வருவதாக கூறுவதற்கு முன்பு செய்யவில்லை. அதற்கு முன்பும் அதிகமாக பணம் சம்பாதித்துதானே வந்தார் என்று பலர் கேள்விகள் எழுப்பினாலும் கூட அவர் முன்பும் பலருக்கு நன்மைகள் செய்திருக்கிறார்.
ஆனால் அதை வெளியில் சொன்னதில்லை என்று விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கட்சி துவங்கிய நிலையில் அடுத்த கட்டமாக கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான வேலைகளை துவங்கி இருக்கிறார் விஜய்.
அப்போதே செய்த ரஜினிகாந்த்:
இந்த உறுப்பினர்களை சேர்ப்பதற்காகவே தனிப்பட்ட செயலி ஒன்றை உருவாக்கி அதை கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆட்களுக்கு கொடுக்கவிருக்கிறார் விஜய். அதன் மூலமாக கட்சியில் ஆட்களை சேர்க்க வேண்டும் அதுதான் அவர்களது பணி. அதிகமான ஆட்களை சேர்க்கும் நபர்களுக்கு தனது கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதாக விஜய் கூறியிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறார் விஜய். அதிமுக திமுக மாதிரியான பெரிய கட்சிகளிலேயே அதிகாரப்பூர்வமான உறுப்பினர்கள் இரண்டு கோடி பேர் கிடையாது. ஓட்டு போடும்போது கட்சியின் உறுப்பினராகவே இல்லாமல் ஓட்டு போடுபவர்கள் தான் அதிகம்.

இப்படி இருக்கும் பொழுது விஜய் எப்படி தனது கட்சியில் 2 கோடி பேரை சேர்ப்பார் விஜய் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சினிமா பிரபலம் ஒருவர் கூறும் பொழுது ரஜினியும் ரசிகர் மன்றம் துவங்கிய பிறகு அதில் உறுப்பினரை சேர்த்தார்.
ஆனால் அதிகபட்சம் 50 லட்சம் பேருக்கும் அதிகமாக ரஜினியால் உறுப்பினர்களை சேர்க்க முடியவில்லை. இத்தனைக்கும் அப்போது ரஜினி மிகப்பெரும் நடிகராக இருந்தார். ரஜினியால் கூட முடியாத ஒரு விஷயத்தை விஜய் செய்வதற்கு எப்படி முடியும் ஆனால் இரண்டு கோடி நபர்களை சேர்ப்பதெல்லாம் வாய்ப்பே இல்லாத விஷயம் என்று கூறுகின்றனர்.
