படத்தை வாங்க ஆள் இல்லை.. உதவுங்க சார்!.. சன் பிக்சர்ஸிடம் போய் நின்ற ரஜினிகாந்த்.. ஜோசியம் வேலை செஞ்சிடுச்சோ!..

Rajinikanth : பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு இருக்கும் மார்க்கெட்டே தமிழ் சினிமாவில் தனி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது திரைப்படங்கள் வரவேற்பை பெற்றவை.

உதாரணமாக விஜய் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே அந்த திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்கள் விற்றுவிடும். லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படம் எல்லாம் எடுப்பதற்கு முன்பே அதன் ஒடிடி உரிமங்கள் விற்கப்பட்டு விட்டன.

அந்த அளவிற்கு பெரும் நடிகர்களுக்கு மதிப்பிருக்கும்பொழுது ரஜினியின் திரைப்படத்திற்கு மதிப்பில்லாமல் போனது அவருக்கே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் தற்சமயம் தயாராகி வருகிறது.

Social Media Bar

இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருந்தனர். ஆனால் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை பொருத்தவரை இந்த படத்திற்கு பெரிதான தொகை கிடைக்கவில்லை. எனவே ஓடிடிக்கே விற்காமல் படத்தை வெளியிட முடியாது என்று வெளியீட்டு தேதியை மாற்றி வைத்தனர்.

இந்த நிலையில் இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசிய ரஜினிகாந்த். படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிக் கொள்ளுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினம் கேட்டுக் கொண்டுள்ளார். கோச்சடையான் திரைப்படம் வெளியான பொழுது ரஜினி ஒரு ஜோசியரை சந்தித்ததாகவும் அந்த ஜோசியர் சௌந்தர்யா ரஜினிகாந்த் உடன் இணைந்து நீங்கள் படம் செய்தால் அந்த திரைப்படம் தோல்வியடையும் என்றும் கூறியதாக ஒரு பேச்சு உண்டு.

அதை நிரூபிக்கும் வகையில் ரஜினிகாந்தே நடித்தும் இந்த திரைப்படம் விலை பார்க்காமல் இருப்பது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.