கவுண்டமணி கூட என்னால நடிக்க முடியாது? – ரஜினியின் வாக்குவாதம்!

கவுண்டமணி சரியான சமயம் பார்த்து கவுண்டர் அடிப்பதால்தான் அவரது பெயரே கவுண்ட மணி என ஆனதாக ஒரு பேச்சு உண்டு.

யார் என்ன என பார்க்காமல் அவர்களை கலாய்த்துவிடுவார் கவுண்டமணி. இதனால் கவுண்டமணிக்கு பல நடிகர்களுடன் சுமுகமான உறவுகள் இல்லாமலும் போனது.

ஆனாலும் அதுவே அவரது இயல்பு என்பதால் அதிலிருந்து மாறாமல் இருந்தார். கவுண்டமணி பல நடிகர்களுடன் காம்போ போட்டு நடித்துள்ளார். சத்யராஜ், சரத்குமார், ரஜினி என யார் கூட அவர் நடித்தாலும் படங்களிலேயே சில இடங்களில் நடிகர்களை நக்கல் செய்துவிடுவார்.

கவுண்டமணியுடன் நடிப்பது நடிகர் ரஜினிக்கு மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் ரஜினி அதிக நகைச்சுவைத்தன்மை கொண்டவர். மாபெரும் நடிகராக இருந்தாலும் சின்ன சின்ன நகைச்சுவைகளின் போது அவர் சிரித்து விடுவார்.

மன்னன் படத்திலேயே உண்ணாவிரதம் இருக்கும் காட்சி ஒன்று வரும். அதில் கவுண்டமணி பேசுவதை கேட்டு சிரிப்பு வந்து ரஜினி முகத்தை திருப்பி கொள்வார். இப்படியாக மிஸ்டர் பாரத் திரைப்படத்திலும் ஒரு சம்பவம் நடந்தது.

வழக்கமாக கவுண்டமணியுடன் காம்போ போடும் சத்யராஜ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் ரஜினி ரவுடி போன்ற மாறுவேடத்தில் சத்யராஜை பார்ப்பதற்கு வருவார். அப்போது ரவுடி மாதிரி தெரிவதற்காக அவருக்கு கைலி கட்டி இடுப்பில் சைக்கிள் செயினை கட்டி இருந்தனர்.

அந்த காட்சியில் ரஜினியோடு கவுண்டமணியும் இருப்பார். அப்போது சத்யராஜூடன் சண்டையிடும் ரஜினி. இரு சைக்கிள் செயினை எடுக்கிறேன் என கூற, அதை கேட்ட கவுண்டமணி “வேணாம்பா கைலி அவுந்திரும்” என கவுண்டர் அடித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு வசனமே அந்த காட்சியில் கிடையாது.

இதனால் ரஜினிக்கு சிரிப்பு வந்துள்ளது. அட போங்கய்யா இந்தாளோட என்னால நடிக்க முடியாது. என விழுந்து விழுந்து சிரிதாராம் ரஜினி. சத்யராஜ் ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

Refresh