rajinikanth short story

நீங்க சாப்பிடுங்க! உங்க பேரன் காசு கொடுப்பான்! – ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி!

Cinema History News Tamil Cinema News

தமிழில் உள்ள கதாநாயகர்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் கதாநாயகர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து தமிழில் ஹிட் கொடுத்து வருகிறார். இப்போதைய காலக்கட்ட நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் ரஜினி. சினிமாவில் அவருக்கு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன.

முன்பெல்லாம் விழாக்களில் பேச வந்தால் அங்கு ஒரு கதை சொல்வதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. அதைதான் பிறகு விஜய்யும் செய்தார். அப்படியாக ஒரு விழாவில் சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறினார் ரஜினி!

ஒரு தடவை ஒரு மனிதர் உணவகத்திற்கு உணவு உண்பதற்காக சென்றார். அப்போதுஅந்த உணவகத்தில் எழுதியிருந்த வசனம் அவரை வெகுவாக கவர்ந்தது. அதில் இந்த ஹோட்டலில் நீங்கள் சாப்பிட்டதற்கு உங்கள் பேரன் காசு கொடுப்பான். இந்த சேவையை நாங்கள் 100 வருடமாக செய்து வருகிறோம் என போட்டிருந்தது.

அந்த மனிதருக்கு ஒரே ஆச்சரியம். அங்கு பணிபுரிபவரை அழைத்து “என்னங்க இப்படி எழுதி இருக்கு. எனக்கு இப்பதான் 4 வயசுல பையன் இருக்கான். எப்படிங்க என் பேரன் வந்து காசு கொடுப்பான்” என கேட்டுள்ளார். உங்கள் பிள்ளை வளர்ந்து அவருக்கு கல்யாணம் ஆகி அவருக்கு குழந்தை பிறக்கும்ல அப்ப வந்து காசை கொடுப்பாங்க போய் சாப்புடுங்க என கூறியுள்ளார் உணவக ஊழியர்.

இவரும் உணவகம் சென்று 2 பிரியாணி, சாப்பாடு என சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். வந்ததும் காசு கொடுங்க சார் என கேட்டுள்ளனர். அதான் ஏன் பேரன் கொடுப்பான்னு சொன்னீங்களே என கூறியுள்ளார் அந்த மனிதர். ஆமா சார் நான் நீங்க சாப்பிட்டதுக்கு காசு கேக்கல. உங்க தாத்தா இங்க சாப்பிட்டு இருப்பார்ல அதுக்குதான் காசு கேக்குறேன் என கூறியுள்ளார்.

எதுவுமே இலவசமாக கிடைக்காது என்பதை கூறும் விதமாக இந்த கதையை ரஜினிகாந்த் கூறியுள்ளார்.