Cinema History
அன்னிக்குதான் ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்னு இருந்தது!.. விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ரஜினிகாந்த்!..
Rajinikanth: கோலிவுட் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டுள்ள நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். போகிற போக்கை பார்த்தால் அடுத்து தொடர்ந்து ரஜினிகாந்த் படம்தான அதிகமாக வரும் போல் இருக்கிறது. ஏனெனில் விஜய்யும் சினிமாவை விட்டு விலக இருக்கிறார்.
அஜித் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் படம் நடிப்பாராம். எனவே மீண்டும் ரஜினி கமலுக்கான மார்க்கெட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் முதன் முதலில் சினிமாவிற்கு வரும்போது நம்மை போல அவரும் சாதாரண மனிதராகதான் வந்தார்.
அப்போது முதல் படமான பைரவி திரைப்படத்தின்ப்போது தனது அனுபவம் எப்படி இருந்தது என்பதை பகிர்ந்து கொள்கிறார் ரஜினிகாந்த். அதில் அவர் கூறும்போது படப்பிடிப்பிற்கு முதல் நாள் எனக்கு தூக்கமே வரவில்லை. எப்போது விடியும் என்று விழித்துக்கொண்டே இருந்தேன்.

சரியாக ஐந்து மணி ஆனப்போது படுக்கையில் இருந்து எழுந்துவிட்டேன். என் வாழ்க்கையில் அதற்கு முன்பு ஐந்து மணிக்கு நான் எழுந்ததே இல்லை. அப்போதே எழுந்து குளித்துவிட்டு தயாராகிவிட்டேன். ஆனால் 8 மணிக்குதான் என்னை அழைக்க வண்டி வந்தது.
அந்த ஓட்டுநர் என்னை சுத்தமாக மதிக்கவே இல்லை. ஸ்டுடியோ அலுவலகத்திற்கு நான் சென்றப்போது அப்போதுதான் அங்கு லுங்கி கட்டிக்கொண்டு கமல் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் வணக்கம் வைத்தேன்.
அதன் பிறகு எங்களை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் எனது முகத்தில் பசையை ஒட்டி அதில் தாடியை ஒட்டினார்கள். எனக்கு மிகவும் அரித்தது. அதை ஒட்டிக்கொண்டு சிரிக்க கூட முடியவில்லை. அதே மாதிரி ஒரு கோர்ட் ஒன்றை கொடுத்தார்கள் அதில் வியர்வை வாடை குப்பென வீசியது. துவைத்து எத்தனை நாட்கள் ஆனது என தெரியவில்லை.

இத்தனை இடையூறுக்கு நடுவே நான் அதில் இரண்டு வசனங்களை பேசி நடிக்க வேண்டி இருந்தது. பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன் இது மட்டும்தான் டயலாக். ஒரு ஆயிரம் முறை அந்த டயலாக்கை பேசி மனப்பாடம் செய்திருந்தேன்.
ஆனால் பாலச்சந்தர் முன்னாள் வந்தவுடன் காட்சியில் அந்த டயலாக்கை நான் சரியாக பேசவில்லை. இதனால் கோபமான பாலச்சந்தர் என்னை திட்ட துவங்கினார். அப்போதே எதற்கு தெரியாத வேலைக்கு வந்தோம். சினிமாவிற்கே நாம் வந்திருக்க கூடாது என தோன்றியது. ஆனால் அப்படியெல்லாம் பாலச்சந்தர் கொடுத்த பயிற்சிதான் பிறகு சினிமாவில் முன்னேற உதவியது என கூறுகிறார் ரஜினிகாந்த்.
