News
சங்கி என்பது கெட்ட வார்த்தைன்னு நாங்க சொல்லலை!.. விளக்கம் கொடுத்த ரஜினிகாந்த்!..
Rajinikanth: ரஜினிகாந்த் திரைப்படங்களை பொறுத்தவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவற்றிற்கு இருக்கும் வரவேற்பு மட்டும் குறைவதே இல்லை. சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்திற்கும் உள்ளாகிறார்.
முக்கியமாக அவரது ஆன்மீக கோட்பாடுகளும் அரசியல் கோட்பாடுகளும் கடுமையாக விமர்சனத்துக்குளாகின்றன. இப்படிதான் காலா படம் வெளியாகும் தருவாயில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் போராட்டம் குறித்து ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் பெரும் எதிர்வினையாற்றின.
அதே போல ஒருமுறை யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கியதற்காக ரஜினிகாந்த் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். அப்படியாக தற்சமயம் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரை குறித்து அவரது மகள் பேசியிருக்கும் விஷயம் அதிக சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினினிகாந்த் பேசும்போது காக்கா கழுகு கதை தொடர்பாக எழுந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விஜய் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த நடிகர் எனவும் அவரை எப்போதும் நான் போட்டியாக நினைத்தது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமியராக நடித்துள்ளார். அதை குறிப்பிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறும்போது மக்கள் ரஜினியை சங்கி என கூறுவது வேதனையளிக்கிறது என கூறினார். இது குறித்து ரஜினிகாந்திடம் கேட்டப்பொழுது என் மகள் சங்கி என்பதை கெட்ட வார்த்தை என எங்கும் கூறவில்லை.
ஒரு மதத்தை வைத்து மட்டும் என்னை அடையாளப்படுத்துவதைதான் அவர் கேள்வி கேட்கிறார் என கூறினார். மேலும் லால் சலாம் திரைப்படம் மத நல்லிணக்கத்தை பேசும் வகையில் இருக்கும் என அவர் பேசியுள்ளார்.
