Connect with us

ஊர போட்டா அடிக்கிறீங்க அந்த புள்ளைய!.. எஸ்.கேவுக்கு கை கொடுத்த சூப்பர் ஸ்டார்… இதுதான் காரணம்!..

thalaivar 171

News

ஊர போட்டா அடிக்கிறீங்க அந்த புள்ளைய!.. எஸ்.கேவுக்கு கை கொடுத்த சூப்பர் ஸ்டார்… இதுதான் காரணம்!..

Social Media Bar

Sivakarthikeyan and Rajinikanth : தமிழ் சினிமாவிலும் கூட பிரபலங்களின் பிண்ணனியில்தான் பல நடிகர்கள் சினிமாவிற்கு வருகின்றனர். அதில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து பெரும் நடிகராக மாறுபவர்கள் ஒரு சிலர்தான். தற்போதைய தமிழ் சினிமாவில் அப்படி முக்கியமாக கூற வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி.

இவர்கள் இருவருமே கீழ்த்தட்டில் இருந்து சினிமாவிற்கு வந்து வாய்ப்பை பெற்றவர்கள். விஜய் சேதுபதியை பொறுத்தவரை அவர் ஹீரோ வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதால் தமிழில் உள்ள டாப் நடிகர்களோடு போட்டி எதுவும் இவருக்கில்லை.

ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அப்படியில்லை. சிவகார்த்திகேயன் கமர்ஷியல் கதாநாயகர்களில் ஒருவராக மாறி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த அவரது திரைப்படங்களான டான் மற்றும் மாவீரன் இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தன.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை கூட்டி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே அவர் நடித்து தயாரித்த அயலான் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார் இசையமைப்பாளர் இமான்.

அதனால் சிவகார்த்திகேயன் பெயர் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் பொங்கலுக்கு எஸ்.கே படத்துடன் போட்டி போட்டுக்கொண்டு பல பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன. ரஜினி சினிமாவில் வளர்ந்தப்போதும் இதே மாதிரியான பிரச்சனையை அனுபவித்தாராம். எனவே நாம் சிவகார்த்திகேயனுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்த ரஜினி அவரை லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் சேர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top