எந்த தயாரிப்பாளரும் எனக்கு இப்படி ஒரு சம்பவத்தை பண்ணுனது இல்ல!.. ரஜினிக்கு அதிருப்தி அளித்த தயாரிப்பு நிறுவனம்!.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். போன வருடம் துவங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருட காலங்களாக சென்று கொண்டுள்ளன.

ஏற்கனவே ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படமும் இதே போலதான் வெகு நாட்களை எடுத்துக்கொண்டது. இதனால் வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பதே ரஜினிகாந்திற்கு கடினமான விஷயமாகிவிட்டது.

இந்த நிலையில் லைக்கா நிறுவனமும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. லைக்கா நிறுவனம் ஒரே சமயத்தில் இந்தியன் 2, மற்றும் 3 வேட்டையன், லால் சலாம், விடாமுயற்சி ஆகிய படங்களை தயாரித்து வந்தது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது.

Vettaiyan
Vettaiyan
Social Media Bar

எனவே வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடக்காமலேயே இருந்தது. இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் கூலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளாராம் ரஜினிகாந்த்.

அதனை தொடர்ந்து இந்த மாதத்தோடு வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய இருக்கிறது.