Connect with us

எப்படி இருக்கு வேட்டையன்.. ரஜினி படமா? ஞானவேல் படமா?

vettaiyan

Movie Reviews

எப்படி இருக்கு வேட்டையன்.. ரஜினி படமா? ஞானவேல் படமா?

Social Media Bar

ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் தா.செ ஞானவேல். தற்சமயம் அவரது இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் வேட்டையன்.

வேட்டையன் திரைப்படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது என்றாலும் கூட இந்த படத்திற்கு இன்னும் அதிகமாக வரவேற்பு இருந்து வருகிறது.

படத்தின் கதை:

அதற்கு ஞானவேல் இந்த திரைப்படத்தின் இயக்குனர் என்பது முக்கிய காரணமாக இருக்கிறது. படத்தின் கதை என்னவென்று பார்த்தால் நடிகை துஷாரா விஜயன் கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளியில் டீச்சராக இருந்து வருகிறார்.

Rajini vettaiyan

Rajini vettaiyan

அந்த டீச்சர் அந்த பள்ளியில் போதை பொருட்களை வைத்து கடத்துவதை பார்க்கிறார். இந்த நிலையில் இந்த செய்தி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன ரஜினிகாந்துக்கு செல்கிறது. அதனை தொடர்ந்து இதற்கு ஆக்ஷன் எடுக்கும் ரஜினிகாந்த் தொடர்ந்து இந்த தவறுகள் செய்பவர்களை என்கவுண்டர் செய்கிறார்.

இதோடு இந்த பிரச்சனை முடிந்துவிடவில்லை. இதற்குப் பிறகு சென்னைக்கு மேல் படிப்புக்காக செல்லும் துஷாரா விஜயன் அங்கேயே ஒரு அரசு பள்ளியிலும் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் துஷாரா விஜயன்.

ரஜினியின் கதாபாத்திரம்:

பிறகு மீண்டும் இந்த வழக்கு ரஜினியின் கைவசம் வருகிறது. ஒரு பக்கம் தன்னால்தான் அந்த பெண் இறந்துவிட்டார் என்கிற மனநிலை ரஜினியை மிகவும் பாதிக்கிறது. அதனை தொடர்ந்து இந்த குற்றத்திற்கு பின்னால் இருப்பது யார் என்று அலச துவங்குகிறார் ரஜினிகாந்த்.

அதனை வைத்து படத்தின் கதை செல்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் துஷாரா விஜயன் நடிகர் பகத் பாஸில், ராணா டகுபதி எல்லோருமே மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்தில் பாதக சாதகங்கள் என்று பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான்.

சாதகமான விஷயம் இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் கருத்து ஆனால் பாதகமான விஷயம் என்பது இது ஒரு ஆக்சன் படமாக எடுக்கப்பட்டிருப்பது இந்த படத்தின் கதைகளம் ஒரு ஆக்ஷன் படத்திற்கான கதைகளம் கிடையாது.

vettaiyan

ஜெய்பீம் மாதிரியே உயிர்ப்புடன் கூடிய ஒரு படமாக வர வேண்டிய படம் வேட்டையன். ஆனால் ரஜினி படமாக அதை மாற்றிய பொழுது படத்தில் நிறைய சண்டை காட்சிகளை வைக்க வேண்டியிருந்தது. சண்டை காட்சிகள் எல்லாமே தர்பார் படத்தில் வருவது போல விமர்சனத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கின்றது.

ஒரு குத்து குத்தினால் பத்து அடி பறந்து போய்விழும் சண்டை காட்சிகள் எல்லாம் இப்பொழுது ரசிகர்கள் ரசிப்பது கிடையாது ஆனால் தொடர்ந்து தெலுங்கு திரைப்படம் போல அதை தமிழ் சினிமாவில் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் தா.செ ஞானவேல் மாதிரியான ஒரு இயக்குனரிடம் இருந்து இந்த மாதிரியான காட்சிகளை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஜெய் பீம் திரைப்படத்தில் ஒரு சண்டை காட்சி கூட இல்லாவிட்டாலும் கூட சூர்யாவிற்கு என்று ஒரு மாஸ் இருக்கும்.

ஆனால் இதில் அவ்வளவு சண்டை காட்சிகள் வைத்தும் கூட ரஜினிக்கு அதை இயக்குனர் ஞானவேலால் கொண்டு வர முடியவில்லை. அந்த விஷயத்தில் படம் கொஞ்சம் அடி வாங்கி இருக்கிறது. இரண்டாம் பாதியை பொருத்தவரை படம் கொஞ்சம் சுமாராக தான் இருக்கிறது மிக மெதுவாக ஓடுகிறது என்கின்றனர் ரசிகர்கள்.

To Top