Connect with us

சர்தார் நடிகையின் மாடர்ன் லுக்!..

rajisha

Actress

சர்தார் நடிகையின் மாடர்ன் லுக்!..

Social Media Bar

Rajisha Vijayan: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிற மொழிகளில் நடிக்கும் நடிகைகளையும் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவது வழக்கமான ஒன்றுதான். மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகள் அவர்கள் நடித்த படத்தின் மூலம் பல மொழி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுவார்கள்.

அந்த வகையில் குறிப்பிட்ட நடிகைகளுக்கு மற்ற மொழியில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து அந்த மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வரும். அந்த வகையில் தற்போது தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரஜிஷா விஜயன்.

இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படமானது அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை ரஜிஷா விஜயன்

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ரஜிஷா விஜயன் கடந்த 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்படத்தை விருதை வென்றார்.

rajisha

அதன் பிறகு அடுத்தடுத்து ஒரு சினிமாக்காரன், பைனல், ஸ்டாண்ட் அப், லவ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேராம்பிரை என்ற ஊரில் பிறந்தார்.

rajisha

மலையாள தொலைக்காட்களில் பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இவ்வாறு பிரபலமாக இருந்த ஜிஷா விஜயன் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் தனுசுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

சமூக வலைத்தளங்களில் ரஜிஷா விஜயன்

ரஜிஷா விஜயன் தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ள நிலையில், அவர் இணையதளங்களில் அவரின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

rajisha

தற்பொழுது அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. மாடன் உடையில் பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்கும் ரஜிஷா விஜயன் அவரின் ரசிகர்களால் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

rajisha

இந்த உடையில் அவர் பார்ப்பதற்கு இளவரசி போன்றும், மிக ஸ்டைலாகவும் இருப்பதாக அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு, புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

To Top